House of 999

 
                                               OM

In this age of internet, the world has become large and has shrunk at the same time - Large, by expanding our horizons to an extreme limit and shrunk by making everything closer to all.
 
 In this journey, we all have met so many people, learnt many things and been blessed by such great souls- be it our forefathers and elders, our teachers, our friends and last but not the least by the generations younger to us.Such experiences have provided so many opportunities to share with all.

Of course, due to physical limitations of body, time, money and space, it might not be possible for all to be with us in our house for ever.

But these would not be an issue for our cyber house.

YES. We, the current residents of 999 Kipling are inviting you personally to come into our Cyber House of www.999kipling.com

This is a website dedicated to our family, friends and relatives. All those who join our cyber family would have a platform to express, share and enjoy their experiences and be a one big joint family.

 It is the drawing room of our house where we all sit around in front of a huge TV, watching some silly Comedy, with laughter and giggles, munching fries and drinking pepsi or cola;

Or around a campfire, with no cell phones disturbing, under a starry night, with songs and dances

SO YOU ARE WELCOME..... COME IN


 

 

                                              ஒம்

        இணையதளம்
நிரம்பியுள்ள இந்தக் காலத்தில் உலகம் விரிந்தும் அதே சமயம் சுருங்கியும் உள்ளது. விரிந்தது எதனாலென்றால் நம் அறிவுப் பார்வை எல்லை கடந்துள்ளது. சுருங்கியது எதனாலென்றால் எல்லாம் நம் அருகிலேயே இருப்பதால். நம் வாழ்க்கைப் பாதையில் நாம் பல பேரைச் சந்தித்திருக்கிறோம், பல விஷயங்களைத் தெரிந்து கொண்டிருக்கிறோம் நம் பெருமைக்குரிய முன்னோர்கள், ஆசிரியர்கள், சினேகிதர்கள், ஏன் இன்னும் சொல்லப் போனால் இளைய சமுதாயத்தினரிடமே நிறைய கற்றுக் கொண்டிருக்கிறோம் அந்த அனுபவங்களை நாம் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற கற்பனையும், அதிலிருக்கும் நன்மைகளுமே இந்த முயற்சியின் அடிப்படை.

        ஆம், 999 கிப்ளிங்கில் வசிக்கும் நாங்கள் எங்களின் இந்த இணையதள இல்லத்திற்கு அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறோம்.

        இந்த இணையதளத்தை நமது நண்பர்கள், சுற்றத்தார் ஆகியோருக்கு அர்ப்பணிக்கிறோம். இதில் ஒவ்வொருவரும் அவரவருடைய அனுபவங்களையும் எண்ணங்களையும் பகிர்ந்துகொண்டு, நாமெல்லாரும் ஒரு பெரிய கூட்டுக் குடும்பமாக இயங்குவோம்.
       இந்த அனுபவத்தை எப்படி விவரிக்கலாம்? நாம் நம் வீட்டுக் கூடத்தில் அமர்ந்து, சீடை முறுக்கு  கொறித்துக்கொண்டு, பெப்சி குடித்துக்கொண்டு, வேடிக்கையான திரைப்படம் பார்த்து கவலையில்லாமல் சிரித்துக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் இருப்பதுபோலோ

 
      அல்லது ஒரு உல்லாசப் பயணத்தில் இனிமையான குளிர் காற்றும் நல்ல நிலவொளியும் இருக்கும் ஒரு ரம்யமான தருணத்தில் அனைவரும் ஒரு வட்டவடிவில் அமர்ந்து சுவாரஸ்யமாகப் பேசிச் சிரித்துப் பாடி மகிழ்வதுபோலோ ஒரு அனுபவத்தை நாம் பெறலாம்

வாருங்கள், வாருங்கள், உள்ளே செல்லலாம்........